மதுரைக்கு குறைவான பேருந்துகள் சிரமத்திற்கு ஆளான  பயணிகள் - படியில் தொங்கிய பயணம்

மதுரைக்கு குறைவான பேருந்துகள் சிரமத்திற்கு ஆளான  பயணிகள் - படியில் தொங்கிய பயணம்

கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. மேலும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த பேருந்து சேவை தற்போது வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அதிகமான முகூர்த்த நாட்கள் உள்ளன.

குறிப்பாக நேற்று, இன்று, நாளை ஆகிய 3 நாட்களும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் உள்ளதால் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் சென்று வருவதால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் எளிதில் சென்று வர பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூடிய பேருந்துகள் பேருந்துகளில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

மேலும் திருச்சியிலிருந்து மதுரை செல்லக்கூடிய பேருந்துகள் குறைவான அளவில் இயக்கப்பட்டதால் பேருந்து பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் திருச்சியில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு பேருந்துகளில் இடம் பிடிப்பதற்கு பயணிகள் முண்டியடித்துக்கொண்டு படிக்கட்டில் தொற்றிக் கொண்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதற்கிடையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கூடுதல் பேருந்துகளை இயக்காமல் குறைவான பேருந்துகளை இயக்கி பேருந்து பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளனர் போக்குவரத்து துறை அதிகாரிகள். கொரோனா தொற்று மூன்றாவது அலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில்,

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பெரும்பாலான பயணிகள் முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி பின்பற்றாமலும் இருப்பது கொரோனா தொற்று பரவலை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn