கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திருச்சிக்கு 4வது இடம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் திருச்சிக்கு 4வது இடம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழகமெங்கும் கொரோனா நோயை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பு முகாம்களானது நடைபெற்றது.

இதில் சுகாதார துறையினருடன் இணைந்து வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித்துறை, மகளிர் திட்ட துறை, காவல் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் பிற துறைகளின் பங்களிப்போடு வெற்றிகரமாக நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பாப்பா குறிச்சி புனித பிலோமினால் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுமார் 497 முகாம்களும் மற்றும் நகர் பகுதிகளில்  126 முகாம்களும் ஆக மொத்தம் 623 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 11 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இன்று 1,10,332 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு முதல் தவணை 75918 நபர்களும், இரண்டாவது தவணை 24937 நபர்களும் மற்றும் கோவாக்சீன் முதல் தவணை 6657 நபர்களும், இரண்டாவது தவணை 2820 நபர்களும் செலுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வும், தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் பலன்களும் சுகாதாரத்துறையினால் எடுத்துரைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் அதிகப்படியாக பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி தமிழகத்திலுள்ள 46 சுகாதார மாவட்டங்களில் நான்காம் இடத்திலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்த சிறப்பான நிலையினை எட்டியதற்கு சுகாதாரத் துறையினர் மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்து துறை பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சிவராசு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn