திருவெறும்பூரில் கெமிக்கல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பொதுமக்கள் அச்சம்
திருச்சி திருவெறும்பூர் அருகே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் கணேசபுரம் பகுதியில் உள்ள ரவுண்டானா அளவு பெரிதாக உள்ளதாலும், சாலை சாய்வாக உள்ளதாலும் இந்தப் பகுதியில் வரும் கனரக வாகனங்கள் அடிக்கடி கவிழ்த்து விபத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வ அமைப்புகள் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் ரவுண்டானா அளவை குறைக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகமும் சம்பந்தப்பட்ட பெல் நிர்வாகமும் ரவுண்டான அளவை குறைப்பது குறித்து கேட்டால் இவர்கள் தங்களுக்கு சம்பந்தமில்லை என ஆளாளுக்கு தட்டிக்கழித்து வருவது பின்னர் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி மழுப்பலான உறுதிமொழி கொடுத்து செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் இந்த பகுதியில் திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள பெல் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கும் குடியிருப்புக்கும் பாதுகாப்புடன் சென்று வருவதற்கு இந்த பகுதியில் ஒரு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக பணி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்படி தொடங்கப்பட்ட பணி ஏனோ கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த நிலையில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் தொடர்கதையாகவே உள்ளது. ஆனால் பெல் ரவுண்டானா அளவு குறையதே இதற்குக் காரணம்.
இதனை தொடர்ந்து காரைக்காலில் இருந்து சேலம் மேட்டூருக்கு பிளாஸ்டிக் பைப் தயரிக்க பயன்படும் எத்திலின் டை குளோரின் என்ற கெமிக்கலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி வந்தது. இதனை முத்துப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் குமார்(38), திருவாரூரை சேர்ந்த ஜான் கென்னடி (33) ஆகியோர் ஓட்டி வந்தனர். அப்போது தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெல் கணேசபுரம் ரவுண்டானா அருகே அந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரமேஷ்குமார் ஜான் கென்னடி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் இருவரையும் அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும். நிகழ்விடத்திற்கு இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நவல்பட்டு மற்றும் பெல் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு துறையினரும் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மூன்று சிறிய ரக கிரேன் உதவியுடன் கவிழ்ந்த கெமிக்கல் டேங்கர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் அந்த முயற்சி பயனளிக்காதால் டேங்கர் லாரியின் இன்ஜின் தனியாக பிரித்து எடுக்கப்பட்டது. பின்னர் இரண்டு பெரிய ராட்சத கிரேன்கள் கொண்டு வந்து கவிழ்ந்த டேங்கர் லாரி தூக்கி நிறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn