ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு போலீசார் தீவிர சோதனை
திருச்சி கண்டோன்மென்ட் காவல் கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணிற்கு whatsapp குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் தான் மனித வெடிகுண்டு என்றும், இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிக்கப் போவதாகவும், முடிந்தால் தடுத்து பார் என குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் எட்வர்ட் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட வழி போலீசார் ரயில் நிலையம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகளை முழுவதும் சோதனை செய்தனர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் சென்று அங்குள்ள பார்சல்களில் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
பின்னர் அந்த குறுஞ்செய்தி புரளி என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வாட்ஸ் அப் குறுஞ்செய்தி அனுப்பிய நபர் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு புரளியால், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO