இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது - அமைச்சர் பேட்டி

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது - அமைச்சர் பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 3175 பயனாளிகளுக்கு ரூ 11 கோடியே 15லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதே போல் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த 59 நபர்களுக்கு பட்டாவும், 12 நபர்களுக்கு 50ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்...... தற்போது விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்புகள் கொடுத்துள்ளோம். இன்னும் ஒரு வருடத்தில் 50,000 இலவச மின் இணைப்புகள் கூடுதலாக கொடுக்கப்படும் என தெரிவித்தார். சோலார் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.

தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது போல் வருகிற செப்டம்பர் முதலில் நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதலுக்கு 100 ரூபாய் மத்திய அரசு கூடுதலாக வழங்கி உள்ளது. தமிழக அரசு நெல் கொள்முதலுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கொடுப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார். 

பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகள் தங்களுக்கு பயனில்லை என்ற கருத்து நிலவுவது தவறு. அப்பொழுது குறுக்கிட்டு பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு நானும் விவசாயி வேளாண் துறை அமைச்சரும் விவசாயி இருவரும் பயிர் காப்பீடு செய்கிறோம். தஞ்சை மாவட்டத்தில் முழுவதும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது ஆர்வமாக கொண்டுள்ளனர் என்றார். 

கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை என்ற விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு காவிரியில் 40 ஆயிரம் கன அடி நீரும் கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனவில் சென்றது. புள்ளம்பாடி வாய்க்கால் திறக்கப்பட மூலம் 28 ஏரிகள் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒருபோகம் மட்டுமே திருச்சியில் விவசாயம் நடைபெறுவதால் அவர்களுக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் கொடுக்கப்படும் என்றார் அமைச்சர் கே.என்.நேரு.

கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு அவர்கள்  சும்மா வாயால பேசிட்டு இருக்காங்க அதுபோல் ஒன்றும் இல்லை என அமைச்சர் நேரு தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO