மாநகராட்சி தோண்டிய குழியில் தவறி விழுந்து மூதாட்டி பலி

மாநகராட்சி தோண்டிய குழியில் தவறி விழுந்து மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்படி நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளின் ஒருப்பகுதியாக பம்பிங்க் ராட்சத குழிகள் தோண்டப்பட்டு போதிய பாதுகாப்பு இல்லாமல் பல மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. 

அதுபோல் திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்ட ஒன்றிய காலனி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பம்பிங் குழி தோண்டப்பட்டு பல மாதங்களாக போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த சாகர் பானு (65) வயதான பெண் இயற்கை உபாதை கழிக்க சென்று உள்ளார். அப்போது கால்தவறி பாதாள சாக்கடை பம்பிங் குழியின் உள்ளே விழுந்து உள்ளார்.

அதில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது யாருக்கும் தெரியவில்லை இந்த நிலையில் இன்று காலை சாகர் பானு உடல் மிதந்துள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் சாகர்பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திருச்சியில் மாநகராட்சி உட்பட்ட காட்டூரில் இருந்து திருவெறும்பூர் வரை உள்ள பகுதியில் பல இடங்களில் திருச்சி மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக பம்பிங் குழிகளை தோண்டியுதுள்ளது. இதனால் பாதுகாப்பு இல்லாமல் பணிகளை முடிக்காமல் அப்படியே விட்டு உள்ளதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும்,

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாதாள சாக்கடை பம்பிங்குழி பணியை விரைந்து முடிப்பதோடு இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO