அரியலூர் - ஜெயங்கொண்டம் - அரை நிர்வாணத்துடன் மனு அளித்த வாலிபரால் பரபரப்பு

அரியலூர் - ஜெயங்கொண்டம் - அரை நிர்வாணத்துடன் மனு அளித்த வாலிபர் -எனது பாட்டனர் கோவணத்துடன் சம்பாதித்த சோத்தை எனது பெயருக்கு மாற்ற அரை நிர்வாணத்துடன் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தது அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டு மனையில் அளவீடு குறைவாக உள்ளதாக கூறி மீண்டும் அளவீடு செய்து தர வேண்டும் என உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இந்நிலையில் தனது மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடையார்பாளையம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அரை நிர்வாணத்துடன் வந்து சுரேஷ் மனு அளித்தது அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision