திருச்சியில் ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சியில் ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்.


காப்பீடு மற்றும் வாகன வரி, டீசல், உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து  ஜேசிபி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மஞ்சுநாத் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் 2-நாளாக பகுதியில் மாவட்ட தலைவர் மஞ்சுநாத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்களை வரிசையாக நிறுத்தி வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH