400 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டத்தை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

400 ஏக்கர் பரப்பளவில்  2 லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டத்தை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், ஊட்டத்தூர் ஊராட்சியில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதிப் குமார், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 400 ஏக்கர் பரப்பளவில் 2 இலட்சம் பனை விதைகளை விதைத்து பனைமரக் காடு உருவாக்கும் திட்டத்தினை மாண்புமிகு நகராட்சி திருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(23.07.2022) பனை விதைகளை விதைத்து தொடங்கி வைத்தார்.

ஊட்டத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலமான 400 ஏக்கர் நிலப்பரப்பு உப்புத்தன்மை நிறைந்த மண்ணாக இருப்பதால்' எவ்விதமான செடிகளும், மரங்களும், வளராத நிலையில் இந்த மண்ணின் தரம் குறித்தும் இதில் எவ்வகையான மரங்களை வளர்க்கலாம் என்பது குறித்தும் உரிய நிபுனர்களின் ஆலோசனையின்படி மரம் இந்த மண்ணில் சிறப்பாக வளரும் என்பதை உறுதி செய்து அதனடிப்படையில் இந்த 400 ஏக்கர் பரப்பளவும், தமிழ்நாட்டின் மாநில மரமான பல்வகை நன்மைகள் தரும். பனைமரத்தினை வளர்க்கும் விதமாக 2 இலட்சம் விதைகளை நட்டு வைத்து பனைமரக் காடு வளர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பனை விதைகளை மகாத்மா காந்தி தேசியஊரக உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து, ஊட்டத்தூர் ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 23 இலட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான 21 வளர்ச்சிப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரிணி, மாவட்டப் பிரமுகர் சு.வைரமணி, புள்ளம்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் ரசியா ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் இந்திரா அறிவழகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள்உடனிருந்தனர். 

பனை விதைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய ரானே கம்பெனி நிர்வாகத்தினரை மாண்புமிகு அமைச்சர் பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY


#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO