கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர்
நாராயணபாபு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவர்களுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர் பேட்டியளித்த அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் 200 முதல் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறத
இதுவரை 8,267 நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.திருச்சி சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 237 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு போராசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் சளி, காய்ச்சல் இருமல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று பரவியுள்ளது .
தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைவாக தான் உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நாமக்கல் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புள்ளது.
ஆயினும் கடந்த காலங்களில் ஒப்பிடுகையில் கொரோனா தாக்கம் குறைவாகவே உள்ளது.
கொரோனா தடுப்பூசி அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம்
அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.