திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் இரண்டாவது அலுவலகம் திறப்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை பகுதி மக்கள் எம்.பி-யை எளிதாக தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்த படி, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திருச்சியைத் தொடர்ந்து புதுக்கோட்டையிலும் திறக்கப்பட்டது.
இந்த தொகுதியில் மாபெரும் வெற்றியை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் அண்ணன் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயலாளர் எஸ்.கே கலியமூர்த்தி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் எம்.லியாகத் அலி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், சந்திரசேகரன், இப்ராஹிம் ஷா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இளமதி அசோகன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் முகமது கனி, மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளர் பார்த்திபன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தார்கள். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம். சின்னதுரைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
இந்த அலுவலகம், ஒரு நாள் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர ஏனைய அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். நாடாளுமன்ற உறுப்பினராக ஒன்றிய அரசு சார்ந்த, எனது ஆளுகைக்கும் வரம்பிற்கும் உட்பட்ட, குறிப்பாக விமான நிலையம், இரயில்வே, காப்பீடு, விவசாயம், சுற்றுச்சூழல், தேசிய நெடுஞ்சாலை போன்ற அனைத்துத்துறை சார்ந்த கோரிக்கைகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதுடன், இயன்ற அளவு உடனுக்குடன் அதற்குண்டான எனது நடவடிக்கைகளை மேற்கொண்டு தேவைப்பட்டால், ஒன்றிய அமைச்சர்களை, துறை சார் அதிகாரிகளை சந்தித்து, அனைத்து மக்கள் நல கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தர பாடுபடுவேன்.
மேலும், மக்களின் கோரிக்கைகளை சட்டமன்ற, உள்ளாட்சித்துறை பிரதிநிதிகளுக்கு கவனப்படுத்த அவசியமிருந்தால் அதனையும் செய்துதர உறுதுணையாயிருப்பேன் என்று தொகுதி மக்களுக்கு தெரிவித்துகொள்வதோடு, உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறேன் என்று பேசினேன்.
மறுமலர்ச்சி திமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் காசி.சிற்றரசு, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ராஜா ஆதிமூலம், மாவட்ட துணை செயலாளர்கள் வி.கே.மதியழகன், கணேசன் செல்வராணி, புதுக்கோட்டை மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசாமி, சபரிநாதன், எஸ்.பி.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் புதுக்கோட்டை தெற்கு - மறவபட்டி பாண்டியன், வடக்கு - ஞானபிரகாசம்,
கந்தர்வகோட்டை - வைர மூர்த்தி, ஆலங்குடி - சுரேஷ், அன்னவாசல் - வீரபத்திரன், விராலிமலை கிழக்கு - சண்முகநாதன், கறம்பக்குடி சேது கலையரசன், ஆவுடையார் கோயில் நமச்சிவாயம், பொதுக்குழு உறுப்பினர்கள் குலசேகரன், பாலகிருஷ்ணன், செல்வராஜ், நடராஜ், கவி செல்வம், பழனிசாமி, மதி பிரபு, ஏழுமலை, முத்துகுமார், கருணாகரன், மாமன்ற உறுப்பினர்கள் காசி, லதா கருணாநிதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அஜித், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision