எல்லா புகழும் தலைவருக்கே ( மு.க.ஸ்டாலின் ) திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேட்டி

எல்லா புகழும் தலைவருக்கே ( மு.க.ஸ்டாலின் ) திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற திமுக முதன்மைச் செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது. எல்லா புகழும் தலைவருக்கே, தேர்தல்  அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

குறிப்பாக, திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், உய்யகொண்டான் ஆறு சீரமைப்போம், குடிநீர், சாலை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம், ஏரி, குளங்களை தூர் வாருவோம், ஆளுங்கட்சி அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளது குறித்த கேள்விக்கு, இது சகஜம் தானே என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF