திருச்சி திருவானைக்கோவிலில் பாரம்பரிய நடை விழா:

திருச்சி திருவானைக்கோவிலில்  பாரம்பரிய நடை விழா:

திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று பாரம்பரிய நடை விழா நடைபெறுகிறது. காலை 8 மணிமுதல் 10 மணிவரை இவ்விழாவை அபியாசம் என்னும் குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டு கோவிலில் நடைபெற்றது.

இவ்விழாவில் திருவானைக்கோவிலினை  பற்றிய சிறப்புகளும், பாரம்பரியமும், கலாச்சாரமும் அங்குள்ள நடைமுறைகளும், விரிவாகப் எடுத்துரைக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மற்றும் கோவில் பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோவிலின் கலாச்சாரங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வாக இந்நிகழ்சி நடைபெற்றது..

மேலும் இவ்விழாவில் J.R பாலிடெக்னிக் கல்லூரி கல்பனா மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.