திருச்சி பட்டர்பிளை ரோட்டரி கிளப் சார்பாக CISFவீரர்களுக்கு மருத்துவ முகாம்

திருச்சி பட்டர்பிளை ரோட்டரி கிளப் சார்பாக CISFவீரர்களுக்கு மருத்துவ முகாம்

 திருச்சி பட்டர்ஃபிளை கிளப் ரோட்டரி சங்கம் சார்பாக 16.02.2025 அன்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஜெனரல் செக்கப், டென்டல் செக்கப், கண் பரிசோதனை, செய்யப்பட்டது.

மேலும் குழந்தைகளுக்கு நடனப் போட்டி ஓவியப்போட்டி ஃபேஷன் ஷோ ஆகியவை நடத்தப்பட்டது. இப் போட்டிகளில் 150 மேற்பட்ட வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக டாக்டர் கணேஷ்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆர் டி என் நித்தியா மற்றும் ஆர் டி என் காஞ்சனா பரிசுகளை வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision