திருச்சி மணப்பாறையில் வெடிசத்தம் அதிர்வு - மக்கள் ஓட்டம்

திருச்சி மணப்பாறையில் வெடிசத்தம் அதிர்வு - மக்கள் ஓட்டம்

திருச்சி மணப்பாறை ,புத்தாநத்தம், வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெடி சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. புத்தாநத்தம், வையம்பட்டி பகுதியில் பொதுமக்கள் வீடு,கடைகளை விட்டு சாலைகளில் ஓடிவந்து நின்றனர்.

காவல்துறையினர் மற்றும் மணப்பாறை சுற்றியுள்ள பொதுமக்கள் இதை உணர்ந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் ஓடுகள் மற்றும் ஐன்னல் கதவுகள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் துறையினர் ஜெட் விமானம் வேகமாக சென்றதால் இந்த சத்தமும் அதிர்வு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision