விரைவில் தூய்மைப் பணிகளில் ரோபோ எந்திரம் - ஆட்சியர் திருச்சி விஷன் அறக்கட்டளை நிகழ்வில் அறிவிப்பு
திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா தேசிய கல்லூரியில் உள்ள அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார்.
இதில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக வேஷ்டி சேலை இனிப்புகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.... தூய்மையாளர்களின் பணி மகத்தான பணி நாம் தூய்மையாக வெளியில் நடமாடுவதற்கு இந்த தூய்மை பணியாளர்களின் பணி முக்கியத்துவமான ஒன்று. மேலும் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது என்பது ஏற்றத்தக்கதல்ல.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் நான் கும்பகோணத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்த போது கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோபோ எந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இதே போல் திருச்சியிலும் விரைவில் தூய்மைப் பணிகளில் ரோபோ எந்திரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO