தீபாவளி மறுநாள் விடுமுறையா? - அமைச்சர் பதில்

தீபாவளி மறுநாள் விடுமுறையா? - அமைச்சர் பதில்

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியீட்டனர். பின்னர் 1115 பயனாளிகளுக்கு ரூபாய் 17.99 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்.... தொலைநோக்கு திட்டத்தின் கீழ் மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும். தொலைநோக்கு திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு திட்டங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான காவல்துறையினரின் விசாரணை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்... காவல்துறையினரின் விசாரணை நடைபெறுவதால் நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..... அனைத்து அரசு ஊழியர்களும்  உள்ளதால், தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்ல முடியாது என்றார்.

இதனை தொடர்ந்து சென்னை செல்வதற்காதனக திருச்சி விமான நிலையம் வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது.... தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மறுதினம், 25ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது, "வரும், 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். எனவே இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் அறிவிப்பார்" என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO