திருச்சியில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் உட்பட 8 நபர்கள் கைது

திருச்சியில் வீச்சரிவாளுடன் சுற்றித்திரிந்த அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் உட்பட 8 நபர்கள் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றிதிரிபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எடுத்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அபிராமி நகைக்கடை என்ற நகைக்கடையை நடத்திவரும் கணேசன் (60), த/பெ. குமரவேலு, நேரு நகர், மச்சுவாடி, புதுக்கோட்டை என்பவரிடம் குடியிருந்து வரும் வெங்கடேஷ் (39), த/பெ. நாராயணன், எண்.15, ஆர்.எம்.எஸ். காலனி, ஆசாத் நகர், கருமண்டபம், திருச்சி என்பவர் புதுக்கோட்டையில் பேராசிரியராக பணிபுரிந்தபோது பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மேற்படி கணேசனிடம் பள்ளி ஒன்று கட்டுவதாக கூறி ரூ.35,65,000/- கடன் வாங்கி அதில் 5 இலட்ச ரூபாயை திருப்பி கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை தராமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் மேற்படி கணேசன், ஓலையூரை சேர்ந்த அவரது மச்சினன் முத்தையா என்பவரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வெங்கடேசிடம் கணேசன், முத்தையா மற்றும் ஒருவர் சென்று பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். வெங்கடேஷ் பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனை தாக்க இன்று (28.07.2024)ம் தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹோட்டல் அன்பு பார்க் அருகே திருச்சி பீமநகரைச் சேர்ந்த (1) கரண், (22), த/பெ. ஜி.ஆர். ரமேஷ், (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இளைஞர் பாசறை திருச்சி மாவட்ட தலைவர்), கே.கே.நகரைச்சேர்ந்த (2) சிபி ராம் (19), த/பெ. வாசு, ஓலையூரைச்சேர்ந்த (3) தினேஷ், (33), த/பெ. மூக்கன், கல்யாண சுந்தரபுரம் சீலப்ப நாயக்கர் தெருவை சேர்ந்த (4) அருண்குமார், (26), த/பெஹரிகிருஷ்ணன், மற்றும் (5) விக்னேஷ் (24), த/பெ. ஹரி கிருஷ்ணன், கோட்டை காவல் நிலைய HS No 16/21) ஆகிய ஐந்து நபர்களும், (TN 45 CF 4455 பலேனோ), (TN10Y4201 Maruti Swift), (TN 45BA959 Bolero) நிறுத்தி வைத்து விட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற அமர்வு நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் அந்த வாகனங்களை தணிக்கை செய்த போது மேற்கண்ட கரண் என்பவருக்கு சொந்தமான பலினோ காரில் பெரிய வாள் ஒன்று வைத்திருந்துள்ளனர். 3 வாகனங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலும் இது தொடர்பாக கே.கே.நகர் இந்திரா நகரைச்சேர்ந்த (6) பார்த்திபன் (30), த/பெ நடராஜன், (கேகே நகர் HS No 4/20), ஒலையூரைச்சேர்ந்த (7) குமார் (எ) விஜயகுமார் (40), த/பெ.மருதையா, புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த (8) முத்தையா (45), த/பெ. பரமசிவம், ஆகிய 8 நபர்களையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்யப்பட்டு மேற்படி 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision