நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு போட்டி - 500 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள்

நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு போட்டி - 500 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள்

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிரா மத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5ம் தேதி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த வருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று 18-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிப்படாத காளையின் உரிமையா ளர்களுக்கும் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, குளிர்சாதன பெட்டி, டிவி, சைக்கிள், பீரோ, குக்கர், கிரைண்டர். மிக்ஸி, கட்டில், சீலிங் பேன் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்பட இருக்கின்றன.

மேலும் வாடிவாசல் அமைத்தல், பேரிகாட் அமைத்தல், வாடி வாசலுக்கு முன்பு சிறிது தூரம் வரை தேங்காய் நார் பரப்புதல், விழா மேடை, பார்வையாளர் மடம் மற்றும் மாடுபிடி வீரர்கள், பார்வை யாளர்களுக்கு முதலுதவி மருத்துவ மையங்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கான முதலுதவி மையங்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்பட பல்வேறு பணிகள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை திருச்சி, கரூர், சேலம் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500 காளைகள் மற்றும் 800 மாடுபிடி வீரர்கள் பங்கு பெறுவார்கள். விழா விற்கான ஏற்பாடுகளை நாவலூர் குட்டப்பட்டு கிராம மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கிராம பட்டையதார் செல்வமணி,

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சி லர்கள் சுபாஷினி சண்முகம், டெல்பின் டேவிட் ராஜது ரை, துணைத் தலைவர் கலையரசன் மற்றும் ஊர் முக்கி யஸ்தர்கள், இளை ஞர் நற்பணி மன்றங்களை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் செய்து செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision