மத்திய அரசின் உயரிய விருதை பெரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர்
மத்திய அரசால் வழங்கப்பட உள்ள ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் - விக்ஞான் ஸ்ரீ என்ற உயரிய விருதை பெற இருக்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பள்ளி பேராசிரியர் முனைவர்.மு.லட்சுமணன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் பள்ளியில் நேரியல் அல்லாத அமைப்பின் உயர் பேராசிரியர் முனைவர்.லட்சுமணன் இயற்பியலில் 2024 ஆம் ஆண்டிற்கான ராஷ்டிரிய விக்ஞான் புரஸ்கார்- விக்ஞான் ஸ்ரீ விருதை பெற இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேரியல் அல்லாத அமைப்பு தொடர்பான கற்பித்தல் மற்றும் ஆய்வுகளில் பல கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகத்திற்கு அறிமுகப்படுத்தி, உலக அளவில் அறியப்படும் பேராசிரியர் லட்சுமணன் அவர்கள் 1978 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் 1989- இல் S.S.BHATNAGAR PRIZE IN PHYSICS விருது, 1990- ல் U.G.C.Hari om Trust - Meghnad Saha Award in Theoretical Sciences விருது, 1994 - ல் தமிழ்நாடு அரசின் TamilNadu Scientist Award, 2014 - இந்திய இயற்பியல் சங்கத்தின் R.D.Birla Award for Excellence in physics மற்றும் 2021- தமிழ்நாடு அரசின் Dr.APJ.Abdul Kalam award ஆகிய உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும் 2021ல் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்கும் National Science Chair Award விருதைப் பெற்ற ஐவரில் இவரும் ஒருவர். இவ்விருது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்த பங்களிப்பாற்றி பணி ஓய்வு பெற்ற மூத்த பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். 2006 இல் பணி ஓய்வு பெற்ற பிறகும், பேராசிரியர் லட்சுமணன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய அரசு ஆய்வு நிதியை வழங்கி வருகிறது.
அவர் பெற்ற விருதுகள் அனைத்திற்கும் மகுடம் வைத்தது போன்று இந்திய அரசு இயற்பியலில் 2024 ஆம் ஆண்டிற்கான ராஷ்ட்ரிய விக்ஞான் புரஸ்கார் - விக்ஞான் ஸ்ரீ என்ற உயரிய விருதை அறிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி புது தில்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள விழாவில், பேராசிரியர்.முனைவர்.மு.லட்சுமணன் அவர்களுக்கு விருதை இந்திய ஜனாதிபதி வழங்க உள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision