கொலை செய்ய முயற்சி மற்றும் பாலியல் தொழிலில் உட்படுத்திய நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
கடந்த (27.09.2023)-ந் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கர்கோயில் தெருவில் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் காரணமாக பூக்கடையில் வேலை செய்யும் தொழிலாளியை ஆபாசமாக திட்டியும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த புலி சரவணன் (எ) சரவணன் (21), த.பெ.ஜெகநாதன் மற்றும் இரண்டு நபர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த (10.10.23)-ந் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை கீழ்புதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த எதிரி அசோக் (36), த.பெ.ராமசாமி மற்றும் நான்கு நபர்கள் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
எனவே, புலி சரவணன் (எ) சரவணன் மற்றும் அசோக் ஆகியோர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை இன்று (02.11.2023)-ந் தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision