திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் 'அஷ்டதிக்கு கொடிமரங்கள் பாலாலயம்'

திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் 'அஷ்டதிக்கு கொடிமரங்கள் பாலாலயம்'

திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் உள்ள அஷ்டதிக்கு கொடி மரங்களுக்கும் மற்றும் சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தையும் எடுத்துவிட்டு புதிய கொடிமரம் செய்வதற்கான பாலாலயம் விழா நடைபெற்றது.

முன்னதாக காலை விக்னேஷ்வர பூஜை உடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாம் நாள் விக்னேஸ்வர பூஜை உடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனைகள் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து குடங்கள் புறப்பட்டன பின்னர் பால ஆலயத்திற்காக உள்ள சித்திர பிம்பங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த அஷ்டதிக்கு கொடி மரங்கள் மற்றும் சுவாமி கொடி மரங்கள் சுமார் ஒரு கோடி மதிப்பில் செய்யப்படவுள்ளது. இந்தப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவுபெறும் என்று கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision