ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்திற்கு இடையூறு - பக்தர்கள் வேதனை

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்திற்கு இடையூறு - பக்தர்கள் வேதனை

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் வரும் 6 ம் தேதி சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பலவிதமான வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வருகின்ற மே 6ஆம் தேதி பல லட்சம் மக்கள் - உள்ளூர் - வெளியூர் பக்தர்கள் கூடும் சித்திரை தேரோட்டமும் இந்த சித்திரை வீதிகளில் தான் நடைபெற உள்ளது. பல லட்சம் மக்கள் பக்தர்கள் கூடும் சித்திரை தேரோட்டமும் இந்த சித்திரை வீதிகளில் நடைபெற உள்ளது.

தற்பொழுது நம் பெருமாள் வீதி உலா வரும் சித்திரை வீதிகளில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சேர்ந்த கீழச்சித்திரவீதி தெற்கு சித்திரை வீதி இணையும் இடத்திலும் வார்டு ஒன்னு ரெண்டில் வரும் கீழ சித்திரையில் நான்கு சித்திரை வீதிகளிலும் கட்டடக் கழிவுகளையும் - கட்டிடத்தை இடித்து அதில் வீணாகிப் போன சாமான்களையும் தெருக்களில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் நம்பெருமாள் வாகனங்களிலும் - தேரிலும் இந்த வீதிகளில் உலா வரும்போது பொதுமக்களுக்கு பெரும் இடையூறும், விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குறிப்பாக திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் வார்டு 2ல் வரும் கீழ சித்திரை வீதி - தெற்கு சித்திரை வீதி இணைப்பில் மாநகராட்சி மாணிக்கம் பிள்ளை தெருவில் ரோடு போடுவதற்காக அகற்றப்பட்ட கட்டடக் கழிவுகளையும், ரோடு இடித்த கழிவுகளையும் இங்கு மழை போல் குவித்து இன்று வரை அள்ளாமல் வைத்துள்ளனர். இதனால் இங்கு பொதுமக்கள் இந்த சித்திரை திருவிழா காலங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அதிகாரிகளும், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமும் உடனடியாக இதில் தலையிட்டு நான்கு சித்திரை வீதிகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக்கழிவுகளையும் இந்த ரோடுகளில் போடப்பட்டுள்ள குப்பை கழிவுகளையும் அகற்றி பொதுமக்களும் பக்தர்களும் அமைதியாக மன நிம்மதியுடன் பெருமாளை தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision