கவுன்சிலர் வீடுபின்புறம் தேங்கி நிற்கும் கழிவுநீர் - நோய் பரவும் அபாயம்

Nov 3, 2023 - 13:23
Nov 3, 2023 - 13:40
 506
கவுன்சிலர் வீடுபின்புறம் தேங்கி நிற்கும் கழிவுநீர் - நோய் பரவும் அபாயம்

திருச்சி மாநகராட்சியில் 23வது வார்டுக்கு உட்பட்ட சாராய பட்டறை தெருவில் கழிவுநீர் ஓடுகிறது. மிக முக்கியமாக இந்த வார்டு கவுன்சிலர் சுரேஷ் வீட்டின் பின்புறம் கடந்த 15 நாட்களாக சாக்கடை நீர் வழிந்து தெருவின் சாலைகளில் தேங்கி நிற்கிறது.

தொடர்ந்து பொதுமக்கள் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அதிகாரியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதி மக்கள் தற்பொழுது கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உருவாகி அதன் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சியில் அதிகமானவருக்கு காய்ச்சல் பரவுவதால் உடனடியாக கழிவு நீரை தேங்காமல் இருக்க வழிவகை செய்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision