ராமஜெயம் கொலை வழக்கு - 12 முக்கிய ரவுடிகளுக்கு தேதி பெற்றது சிறப்பு புலனாய்வு குழு

ராமஜெயம் கொலை வழக்கு - 12 முக்கிய ரவுடிகளுக்கு தேதி பெற்றது சிறப்பு புலனாய்வு குழு
திமுக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடை பயிற்சி மேற்கொண்டபோது ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 12 முக்கிய ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய் குழு மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்றது. 12 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து டெல்லிக்கு சென்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் தேதி அனுமதி  சிறப்பு புலனாய்வு குழு வாங்கியுள்ளனர். குறிப்பாக ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமான 13 நபர்களிடம் (ரவுடி) உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்6ல் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர். 

இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன்,

தினேஷ், மாரிமுத்து, லெப்ட் செந்தில் ஆகிய 12 பேரிடமும் வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn