நகர்மன்ற கூட்டத்தில் விவாதம்

நகர்மன்ற கூட்டத்தில் விவாதம்

திருச்சி மாவட்டம் லால்குடி நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் குமார், துணை தலைவர் சுகுணா, நகராட்சி பொறியாளர் வெங்கட்ராமன், நகர் திட்டமிடல் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நடந்த விவாதம் :

மாரிகண்ணு (திமுக) : லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் புதிதாக போடப்பட்ட எல்இடி மின்விளக்குகள் அனைத்தும் எரியவில்லை. லட்சுமி நாராயணபுரம் பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்து மேலே போடப்பட்ட மண்ணை உடனை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். லால்குடி புதுத் தெரு எதிரே உள்ள நகராட்சி படிப்பகத்தை நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதற்கு கருணாநிதி நூற்றாண்டு விழா படிப்பகம் என்று பெயர் வைக்க வேண்டும்.

முகமது பெரோஸ் (அதிமுக) : பரமசிவபுரம் 8 வது குறுக்குத் தெருவில் புதர் மண்டி கிடக்கும் செடிகளை சுத்தம் செய்ய வேண்டும். பரமசிவபுரம் பகுதியில் சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

வைரகாவியன் (திமுக) : 18 வார்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவில் பொது கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாரதா (சிபிஎம்) : மேல கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலை மற்றும் சாக்கடை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 

நகராட்சி கமிஷனர் குமார் : நகராட்சி கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுப்பணி மேற்பார்வையாளர் பூங்கொடி வரவேற்றார். துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision