G கார்னர் பகுதியில் விரைவில் சுரங்கப்பாதை - அதிகாரிகளுடன் திருச்சி எம்பி கள ஆய்வு
மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள G - கார்னர் பகுதியில், சர்வீஸ் சாலை இருவழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் கருப்பு பகுதியாக (Black spot) காவல் துறையால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுவரை விபத்துகளால் 7 மனித உயிர்கள் பறிபோயிருக்கும் இந்தப் பகுதியில் தினம் தினம் விபத்துகளும், காயங்களும், தப்பித்து உயிர்ப்பிழைப்பதும் வாடிக்கையாக நிகழ்வதை தவிர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர். தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற சாலையாகவும், பல கல்வி நிறுவனங்களும், தென்னக இரயில்வே - பொன்மலை பணிமனையில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்ற முக்கியமான சந்திப்பாகவும் உள்ளது.
பல வருடங்களுக்கு முன்பே இரயில்வேத் துறையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் கூடி தொடங்கிய இப்பணியில் இரு துறைகளுக்கும் இடையேயான கருத்து முரணால் வேலை தொடங்கப்படாமலே கைவிடப்பட்டது. அதனால் அந்த மக்களின் கோரிக்கை இதுவரையும் கேட்பாரற்று இருந்தது. அதற்கு தீர்வு எட்டப்பட்டே ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கடந்த (11.01.2025) அன்று நடைபெற்ற DISHA இரண்டாவது கூட்டத்தில் G - கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நான் திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை அளித்திருந்ததையும் சுட்டிக்காட்டி பேசினேன்.
அதன் அடிப்படையில், நேற்று (25.01.2025) காலை தென்னக இரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டேன். ஏற்கனவே எனது கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுரங்கப்பாதைக்கான திட்ட வரைவை தயாரித்து வந்திருந்தார்கள். அதை இரயில்வேத் துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர். எனவே, 15 ஆண்டுகளாக உருவாகியிருந்த தடைகல்லை எனது ஒருங்கிணைப்பில் இரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக் காவல் ஆகிய மூன்று துறை அதிகாரிகள் சேர்ந்து தகர்த்தியிருக்கிறோம் என்று பதிவுசெய்கிறேன்.
அப்போது அந்த மூன்று துறைகளின் அதிகாரிகளுடன் நான் பேசுகையில், இப்பணி முழுமையான தீர்வை எட்டி சுரங்கப்பாதை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டேன். இதுவரை இதில் கவனம் செலுத்திய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
நமது கூட்டு முயற்சியால் G - கார்னர் பகுதியை விபத்தில்லா பகுதியாக மாற்றி மக்கள் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்வோம் என்று கூறினேன். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் A.N. Praveen Kumar, Project Director NHAI Trichy, Rajaa, AHME Consultant Trichy Padalur Section, Gopal, TPTPL Asst Project Manager Concessionaire. தென்னக இரயில்வே துறையின் P. Anbalagan- DRM, V. Ravikumar- Divisional Engineer, N. Manikavasagam- Asst. Divisional Engineer- Central, S. Bhaskar- Asst. Divisional Engineer- Ponmalai. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் T. Karthikeyan- Cantonment Traffic Inspector. Traffic Police Inspector, Srinivasan- Ariyamangalam- Sub Inspector (Incharge) ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
உடன் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர்ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்ல மண்டி சோமு, புறநகர் வடக்கு மணவை தமிழ்மாணிக்கம், புறநகர் தெற்கு டி. டி. சி. சேரன், பொன்மலை பகுதி செயலாளர் எஃப். எஸ். தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், ஜெயசீலன், ரயில்வே செழியன், வட்ட செயலாளர் டோமினிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ் ஹரிஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision