குத்தகை நிலத்தை ஆட்டையை போட முயன்ற பாஜக நிர்வாகி மனைவி கைது
திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவில் தென்னை நாற்றங்கால் உள்ளது. அரசு ஏற்கனவே இதில் விவசாயிகளுக்கு தென்னை நாற்றங்காலை கொடுத்து வந்தது. இந்த 18 ஏக்கரின் உரிமையாளர் ரங்கசாமி.இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள பாஜக விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனுக்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இடத்தின் உரிமையாளர் ரெங்கசாமி கையெழுத்தை கோவிந்தன் போலியாக கையொப்பமிட்டு ஆவணங்கள் தயாரித்து தேவராஜன் என்பவருக்கு 19 கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒப்பந்தம் போட்டு உள்ளார். அதற்கு முன்பணமாக 5 கோடி ரூபாய் கோவிந்தன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை இடத்தையும் இவரால் பதிவு செய்து தர முடியாத நிலையில் தேவராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தேவநாதன் திருச்சி மாநகர குற்ற பிரிவு -2ல் புகார் அளித்ததன் அடிப்படையில் கோவிந்தனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் கோவிந்தனை ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோவிந்தன் தேவராஜனிடமிருந்த பணத்தை தனது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கில் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்துள்ளார்.
இதனால் இவரது மனைவி கீதாவும், கோவிந்தனுடன் கைதாகி உள்ளார். மேலும் வாசு ,சேகர் இரண்டு புரோக்கர்கள் மீதும் மாநகர குற்ற பிரிவு-2ல் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்ததாக வந்த தகவல் அடிப்படையில் தேவராஜன் கோவிந்தன் மீது புகார் கொடுத்துள்ளார். கோவிந்தன் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision