ஆட்டோ டிரைவரை ஊசி போட்டு கொடூர கொலை - தற்கொலை நாடகமாடிய குடும்பம்

ஆட்டோ டிரைவரை ஊசி போட்டு கொடூர கொலை - தற்கொலை நாடகமாடிய குடும்பம்

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம்.இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி சுலோச்சனா (31) மற்றும் தாய் காமாட்சி (49) ஆகியோரிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன் தனது மனைவி சுலோச்சனா தாய் காமாட்சி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார்.

அப்பொழுது காமாட்சியின் உறவினர்களான திருநங்கை விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (19), திருநங்கை குபேந்திரன் என்கிற நிபுயா (19), மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டிலிருந்த காமாட்சியும் சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்து கொண்டனர். உள்ளே சென்ற மூவரும் குணசேகரனின் உடலில் காலி ஊசியை செலுத்தியுள்ளனர்.

பின்னர் விஜயகுமார், லித்தினியா ஸ்ரீ, நிபுயா ஆகியோர் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்துள்ளனர். காமாட்சியும் சுலோச்சனாவும் வீட்டு வாசலில் அமர்ந்து வெளியில் இருந்து யாரும் வருகிறார்களா என காவல் காத்துள்ளனர். பின்னர் இறந்த குணசேகரனின் உடலை வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தொங்கவிட்டு நாடகம் ஆடியுள்ளனர். இது குறித்து காமாட்சி கோட்டை காவல் நிலையத்தில் தனது மகன் தற்கொலை செய்து கொண்டான் என புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் இந்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் குணசேகரனின் எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் சோதனை செய்த போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் 2 திருநங்கைகள் மற்றொரு நபர் என 3 பேர் வீட்டிற்குள் செல்வதும் மனைவி சுலோச்சனா மற்றும் அம்மா காமாட்சி ஆகியோர் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.

இது தற்கொலை அல்ல கொலை என்பது உறுதி செய்யப்பட்டது . இதன் பெயரில் கோட்டை போலீசார் காமாட்சி, சுலோச்சனா, விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ, குபேந்திரன் என்கிற நிபுயா, விஜயகுமார் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision