இணைய வழியில் நடைபெற்ற திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 28 வது நிறுவனர் தினவிழா
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் (2020 ல் சர்தார் படேல்
சிறந்த ஆராய்ச்சி விருது பெற்ற நிறுவனம்) 28வது நிறுவன நாள் நிகழ்ச்சி இயக்குநர் முனைவர் எஸ். உமா தலைமையில் வெகு சிறப்பாக இணையதளம் வழியாக நேற்று நடைபெற்றது. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை, பயிர் பெருக்கம், பயிர் பாதுகாப்பு, பயிர் உற்பத்தி துறைகளில் கண்டறிந்து வரும் இந்த வேளையில், இப்பொழுது தன் நோக்கத்தை வாழை மதிப்பு கூட்டல் சங்கிலியுடன் சந்தைப்படுத்தும் முறைகளில் பல புதுமைகளை புகுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் துணை இயக்குநர் எ.கே.சிங் தன் சிறப்புரை வழங்கிய போது வாழை விவசாயத்தை அடுத்த இலாபகரமான தொழிலாக எடுத்து செல்ல வேண்டுமென்றால் மதிப்பு சங்கிலி எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சந்தை வழிபடுத்தும் முறைகளாலே முடியும் என்றார். இப்பொழுது உள்ள சந்தைப்படுத்தும் முறைகளில் இருந்து சிறந்த முறையினை நோக்கி செல்லும் பொழுதே நாம் அதிக வருமானத்தை அடைய முடியும். மேலும் புதிய தொழில் நுட்ப்பங்களுடன், வெளிப்படையான சந்தைபடுதுத்தும் புதிய மேம்பட்ட முறைகளை எடுத்துச்செல்வதே விவசாயிகளின் வருமானத்தை இரடிப்பாக்கும் என்றார்.
சிறப்பு விருந்தினர், முனைவர் மல்ஹோத்ரா வேளாண் ஆணையர், இந்திய அரசு, பல்வேறு வாழைசார் தொழில்நுட்ப ஏடுகளை வெளியீட்டு, ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த தொழில் முனையும் புதிய சிந்தனைக்கு பரிசளித்தார். மேலும் அவர் கூறுகையில், வாழை உற்பத்தியில் நாம் ஓரளவு தன்னிறைவு அடைந்திருக்கும் வேளையில், வாழை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டுமென்றால் வாழை சந்தைப்படுத்தலை நாம் அடுத்த நிலைக்கு இலாபகரமான தளத்தை நோக்கி எடுத்து செல்வதிலேயே உள்ளது.
அந்த விதத்தில் இந்த நிறுவன நாளன்று, தேசிய வாழை ஆராய்ச்சி மையம் எடுத்திருக்கும் இந்த புதிய கருத்தரங்கு முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது என்றார். மத்திய அரசின் அத்ம நிர்பர் திட்டத்தின் கீழ், புதிய தொழில் முனையும் திட்டங்களை நிறைவேற்றயும், ஒரு மாவட்டம் ஒருபொருள் என்ற திட்டத்தின் கீழ் திருச்சி, தேனி மாவட்டத்தில் வாழை மேம்பாட்டு முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது. திசு வளர்ப்பு மூலம், சீரான வளர்ப்பு உள்ள வாழையை உருவாக்கும் பொழுது, ஏற்றுமதியில் நல்ல விலை கிடைப்பதற்கு காரணமாக
இருக்கும்.
நல்ல தரமான விதை கன்றுகளை ஊர்ஜிதம் செய்வதற்க்கு தொழில்நுட்ப்பங்களை மேம்படுத்துவதால் வாழை சந்தைப்படுத்ததலை மேபடுத்த முடியும் என்றார். இந்திய அளவில் வாழை விவசாயத்தில், பல்வேறு சாதனைகள் புரிந்து வரும் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர்கள், சிறந்த வேளாண் அறிவியல் மையம், உழவர் ஆர்வலர் குழு, சிறந்த தொழில் பரவலாக்கம் செய்தவர்கள், சிறந்த தொழில் முனைவோர் என பத்திற்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கௌரவ விருந்தினரான பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில்.... வாழை நார் பயன்பாட்டை பல்வேறு தளங்களுக்கு எடுத்து செல்லும்போது, வாழை தேவையினை அதிகரிப்பதோடு, அது நேரடியாகவோ மறைமுகமாகவோ வாழை விவசாயிகளின் இலாபத்தை அதிகரிக்கும் என்றார். திருச்சி, இந்திய மேலாண்மை நிறுவன இயக்குந முனைவர் பவன்குமார் சிங், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் மேலாண்மை மற்றும் அவர்கள் நடத்திய ஹேக்கத்தான் முதலிய நிகழ்வுகள் எவ்வாறு மேலும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை வாழ்த்தி பேசினார். முனைவர் எம். செல்வம், துணை துணை வேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சியில் உள்ள வாலாற்று முக்கிய இடங்களில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முக்கிய பங்கை வகிக்கிறது எனவும், இதன் ஆராய்ச்சிகள் கண்டிப்பாக எதிர் வரும் வாழை விவசாயத்திற்கு துணை நிற்கும் என்பதையும் கூறினார்.
டெல்லியில் இருந்து தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் இணை இயக்குனர், முனைவர். பி. கே. பாண்டே வாழையை பொறுத்தவரை, சந்தைப்படுத்தலே மிக கடினமான காரியமாக உள்ளது. நல்ல விலை வாழை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் வாழை மதிப்புக் கூட்டலும், வாழை சந்தைப்படுத்தும் முறைகளை ஆராய்ந்து மேம்படுத்துவதாலே மட்டுமே முடியும் என்பதை தெரிவித்துக் கொண்டார். மேலும் வாழை இப்பொழுது அதிக விவசாயிகள் சாகுபடி செய்து வருவதாகாவும், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில், கரும்புக்கு பதில் வாழை விவசாயம் செய்ய உழவர்கள் முன்வருகின்றனர் எனவும் தெரிவித்தார். இந்த துவக்க விழாவை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சந்தைப்படுத்தல் வழியாக வாழை வியாபாரத்தின் இலாபத்தை அதிகரிப்பதை பற்றி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கலந்துரையாடினார்கள். இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறுபட்ட மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், வாழை விவாசயிகள், வாழை தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn