திருச்சி பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டல் விடுத்த நா.த.க லண்டன் இளங்கோ (ஜானி) மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

திருச்சி பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டல் விடுத்த நா.த.க லண்டன் இளங்கோ (ஜானி) மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

திருச்சி மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் D.மோகன்ராஜ் ஆகிய நான் நிலைய பொறுப்பில் இருந்த போது மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற நடப்புதாள் REF NO: 3695/PET/SP- TR/2024- புகாரதாரரான திருச்சி மாவட்டம், முசிறி, பார்வதிபுரம், அழகாப்பட்டிசாலை, கதவு எண்: 21/1 என்ற முகவரியில் வசிக்கும் கார்த்திகேயன் மனைவி திருமதி.மீனா என்பவர் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்த விவரம் பின்வருமாறு :

நான் B. Sc.(Computer Science) படித்துள்ளேன். எனது கணவர் என்னை கடந்த 2012-ஆம் ஆண்டில் விவாகரத்து செய்துவிட்டதால் தனியாக வாழ்ந்து வந்தேன். எனது வருமானத்திற்காக திருச்சி குமாரவயலூரில் உள்ள முல்லை ரிசார்ட்டில் வரவேற்பாளராக கடந்த 2017 முதல் 2019 வரை வேலை செய்து வந்தேன். திருச்சி சீனிவாசநகர் 7-வது குறுக்கு தெருவில் வசிக்கும் குமார் என்பவர் முல்லை ரிசார்ட்டினை மேற்பார்வை செய்து வந்தார். அவரது சகலையான இலங்கை தமிழர் இளங்கோ (எ) ஜானி என்பவர் அந்த ரிசார்ட்டிற்கு வரும்பொழுது எனக்கு அறிமுகமானார். பின்பு, அங்கிருந்து நான் வேலையை விட்டுவிட்டு எனது சொந்த ஊரான முசிறிக்கு 2019-ல் வந்துவிட்டேன்.

மேற்படி, நாம் தமிழர் கட்சியின் ஆத்ரவாளரான லண்டனில் வசிக்கும் இளங்கோ (எ) ஜானி என்பவர் என்னை தொடர்பு கொண்டு தான் லண்டனில் சூப்பர் மார்கெட் ஆரம்பிக்க இருப்பதாகவும், அதற்கான மளிகை பொருட்களை திருச்சி சுற்றுபகுதியில் கொள்முதல் செய்து, முசிறியில் குடோனில் வைத்து Pack செய்து லண்டனுக்கு அனுப்புமாறும், அதற்கு மாதச்சம்பளம் தருவதாகக் கூறினார். பின்பு, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ரூ.20,000/- ஊதியமாக லண்டனிலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு, 2022-ஆம் ஆண்டில் முசிறியில் ஒரு குடோன் வாடகைக்கு பிடித்தது முதல் மாதாமாதம் ரூ.30,000/- அனுப்பி வைத்தார்.

பின்பு, கடந்த 2021-ஆம் ஆண்டு இளங்கோ (எ) ஜானி லண்டனிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த மீன் கொள்முதல் செய்வது சம்பந்தமாக என்னை தூத்துக்குடி வருமாறு கூறினார். அதன்படி, அங்கு சென்று மீன் கொள்முதல் செய்வது சம்பந்தமாக பேசிவிட்டு வந்தேன். மேலும், துபாயில் எனது பெயரில் கம்பெனி லைசென்ஸ் எடுப்பதற்காக இளங்கோ (எ) ஜானி அழைத்ததன் பேரில் கடந்த (27.08.2022) மற்றும் (28.08.2022) ஆகிய 2 நாட்கள் துபாய் சென்றேன். அங்கு அறையில் தங்கியிருந்த பொழுது எனக்கு தெரியாமல் நான் உடை மாற்றுவதை, குளிப்பதையும் இளங்கோ (எ) ஜானி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அதன் பின்னிட்டு, அவர் இலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிப்பதாக எனக்கு தெரியவில்லை.

திருச்சியிலும் பொருட்களை கொள்முதல் செய்வதுபோல எனக்கு தெரியவில்லை. இதனால், நான் கடந்த (03.07 2024) அன்று ஈரோட்டை சேர்ந்த கார்திகேயன் (எ) ஜீவா என்பவரை மறுமணம் செய்துகொண்டு முசிறியில் குடும்பமாக வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில், மேற்படி இளங்கோ (எ) ஜானியிடம் நான் திருமணம் செய்துகொண்டு எனது கணவருடன் குடும்பம் நடத்தி வருவதால் தங்களுடன் நான் தொழில் செய்ய விரும்பவில்லை. வேறு நபரை அமர்த்திக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்.

இதனால் கோபமடைந்த இளங்கோ (எ) ஜானி என்னை தொலைபேசியில் அழைத்து நான் எடுக்கவில்லை என்பதால் தினமும் குரல் குறுஞ்செய்திகளை (Voice Message) அனுப்பி, எனது கணவரை விட்டுவிட்டு, இவண்டனுக்கு வந்துவிட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் எனது நிர்வாண படங்களையும், காணொளிகளையும், இணையத்திலும் மற்றும் நாம் தமிழர் குழுவில் உள்ள அனைவருக்கும் பதிவேற்றம் செய்து உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் எனக்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவு இருப்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் என்னை மிரட்டியதால் கடந்த (21.07.2024) அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

எனது கணவர் வீட்டார் என்னை காப்பாற்றினார்கள். இதுசம்பந்தமாக எனது கணவர் என்னை விசாரித்தபொழுது நடந்த விபரங்களை அவரிடம் கூறினேன். எனது கணவர் அவரது கைப்பேசியிலிருந்து இளங்கோ (எ) ஜானிக்கு பேசி கண்டித்துள்ளார். இதனால், இன்னமும் கோபமடைந்த இளங்கோ (எ) ஜானி எனது நிர்வாண படங்களை எனது கணவருக்கு அனுப்பி வைத்தார். எனது தகப்பனார் அமிர்தராஜன் என்பவருக்கும் இளங்கோ (எ) ஜானி இதுபோன்ற குறுஞ்செய்திகளை அனுப்பி என்னை இலண்டனுக்கு அனுப்பி வைக்குமாறும் இல்லாவிட்டால் என்னை எனது கணவருடன் வாழ விடமாட்டேன் என்று தொடர்ந்து மிரட்டியதால், எனது அப்பா மனஉளைச்சல் அடைந்து கடந்த (29.08.2024) அன்று இறந்துபோனார்.

மேலும், கடந்த (02.08.2024) முதல் இன்றைய தேதி வரை எனது கணவரின் கைப்பேசி எண்ணான 90256 19032 மற்றும் 93420 59180 ஆகிய எண்களுக்கு தினமும் 2 முதல் 5 வரை குரல் குறுஞ்செய்திகள் (Voice Message) கிட்டத்தட்ட 200- க்கும் மேல் அனுப்பியுள்ளார். மேலும், எனது கணவருக்கு போன் செய்து திருமண செலவுகளை கொடுத்து விடுவதாகவும், என்னை இலண்டனுக்கு அனுப்பி வைக்குமாறும் இல்லாவிட்டால் தொடர்ந்து தொலைபேசியில் தொல்லை கொடுத்து வாழ விடமாட்டேன் என்றும், நிர்வாண படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வேன் என்றும் மிரட்டினார். மேலும், இளங்கோ (எ) ஜானி +447944151968, +447405570857, +447768086954, +447459369883, +447459720873, +447440750836, +447440642490 என்ற இலண்டன் எண்ணிலிருந்து எனது கணவருக்கு குரல் குறுஞ்செய்திகளையும் (Voice Message). வாட்ஸ்அப் அழைப்புகளையும் செய்து வருகின்றார்.

மேலும், இந்தியாவில் உள்ள அவரது நண்பர்கள் கைப்பேசி எண்களான 7025335972, 9894369701, 9895270375 ஆகிய எண்களிலிருந்து Conference Call மூலமாக தொடர்பு கொண்டு பேசி மிரட்டி வருகின்றார். மேலும், இன்று (17.10.2024) அன்று அதிகாலை 03:00 மணியிலிருந்து தொடர்ந்து எனது கணவரின் அண்ணன் சுரேஷ் என்பவரையும் தொடர்பு கொண்டு, என்னை இலண்டனுக்கு அனுப்பி வைக்காவிட்டால், உனது தம்பியையும், மீனாவையும் நிம்மதியாக சேர்ந்து வாழ விடமாட்டேன் என்று மிரட்டினார். மேற்படி, இளங்கோ (எ) ஜானி என்பவரது சகலை குமார் திருச்சி, சீனிவாச நகர் 7-வது குறுக்கு தெருவில் வசித்து வருகின்றார். அவரிடமும் இது சம்பந்தமாக நான் நேரில் சென்று குரல் குறுஞ்செய்தி (Voice Message) அனுப்புவது குறித்து முறையிட்ட பொழுது, தனக்கும் இளங்கோ (எ) ஜானிக்கும் கொடுக்கல் வாங்கல் நிறைய இருப்பதால் இதுகுறித்து கேட்டால் அவனிடமிருந்து வரவேண்டிய பணம் வராமல் போய்விடும் என்று கூறிவிட்டார்.

எனது கணவரும், எனது மாமனார். கொழுந்தனார் ஆகியோர் இளங்கோவன் (எ) ஜானியுடனான பிரச்சினையை முடித்துவிட்டு வருமாறும், இல்லாவிட்டால் என்னை விவாகரத்து செய்து அனுப்பிவிடுவதாக கூறிவிட்டனர். இதனால் எனது திருமண வாழ்க்கையும் கேள்விகுறியாகி விட்டது. எனவே, எனது நிர்வாண படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து எனது வாழ்க்கையை கெடுத்து அழித்துவிடுவதாக மிரட்டி வருகின்ற, திருச்சி சீனிவாச நகர் 7-வது பிரதான சாலையில் வசித்த தற்சமயம் இலண்டனில் வசித்து வருகின்ற, இளங்கோ (எ) ஜானி என்பவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவரிடமுள்ள எனது நிர்வாண படங்களை மீட்க வேண்டுமாய் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் எனது கணவர் கார்த்திகேயன் (எ) ஜீவா என்பவருக்கு லண்டனிலிருந்து இளங்கோ (எ) ஜானி அனுப்பி குரல் குறுஞ்செய்திகள் (Voice Message) அடங்கிய Pen Drive -1 ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன். இப்படிக்கு(SD)XXXX (1). Sir. Received a complaint and registered a case in Trichy District Cyber Crime P.S Cr.No: 42/2024 U/S 75(1)(II), 79, 351(2) BNS & 66 E, 67, 67A IT ACTOn 19.10.2024 at 18.00 hrs. (sd) D.MOHANRAJ-SUB INSPECTOR OF POLICE, CYBER CRIME PS, TRICHY DISTRICT. இதன் அசல் முதல் தகவல் அறிக்கையினை வாதியின் புகார் மனுவுடன் இணைத்து சுணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.5 திருச்சிராப்பள்ளி அவர்களுக்கு அனுப்பியும் மற்ற நகல்களை சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும், ஒரு நகல் விசாரணைக்காக காவல் ஆய்வாளர்அவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

13. Action Taken: Since the above report reveals Commission of Offence(s) u/s as mentioned in item No.2, registered case and Directed RUBI S, INSPECTOR OF POLICE to took up the investigation. எடுக்கப்பட்ட நடவடிககை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2-ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியாள குற்றமாக வழக்கு பதிவு செய்து RUBIS INSPECTOR OF POLICE பணியாளர் மடிக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது. FIR read over to the Complainant/Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant/Informant free of cost. மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision