ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் 2ம் கட்ட மரம் நடும் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் 2ம் கட்ட மரம் நடும் நிகழ்ச்சி

தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் அறிவுரைப்படியும்  ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே ஸ்ரீநம்பெருமாள் வசந்தமண்டபம் நந்தவனததில்  ஈசான்ய மூலையில் அர்ச்சகர் சுந்தர்பட்டாரால் பூஜை நடத்தப்பட்டு  ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து ஸ்ரீரங்கம் கோயில் தலவிருட்சமான புன்னை மரக்கன்றை  நட்டு வைத்தார்.

ஸ்ரீ நம்பெருமாள் வசந்த மண்டபம் நந்தவனம் மற்றும் ஆயிரங்கால் மண்டபம் மேற்க்கு புறம் ஆகிய இரண்டு இடங்களில் ஐம்பது புன்னை மரக்கன்றுகள் நடத்திட்டமிட்டு இன்று முதற்கட்டமாக நாற்பது புன்னை மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கு.கந்தசாமி மண்டல இணை ஆணையர் அலுவலக மேலாளர் ஹரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி No.1 டோல்கேட் பிச்சாண்டர் கோயில் அருகில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பு (ஆழ்வார் தோப்பு) 1008 மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn