திருச்சி மாநகரில் தனியார் பங்களிப்புடன் பொதுக்கழிப்பிடங்கள் மேம்பாடு
தூய்மை திருச்சி திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒருபகுதியாகப் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் பொதுக்கழிப்பிடங்களைக் கொண்டுள்ள நகரங்களில் ஒன்றான திருச்சியில் சுமார் 400 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்தவும், புதிய கழிப்பிடங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ள மாநகராட்சி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பொது தனியார் பங்களிப்புத் திட்டத்தின்கீழ் பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிக்க முன்வரும் தனியார் நிறுவனங்களைக் கண்டறியும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, விளம்பர அனுமதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்றும், விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் மாநகராட்சியை அணுகி அதற்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் அசுத்தம் செய்வதைத் தடுத்து, தூய்மைக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision