என்.ஐ.டி-யில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிக்களுக்கா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

என்.ஐ.டி-யில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிக்களுக்கா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி-யில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ நோயாளிகளுக்கான சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.

இந்த சிகிச்சை மையத்தில் ஒரு அறைக்கு 15 படுக்கைகள் வீதம் 24 அறைகளில் மொத்தம் 300 படுக்கைகளும், சித்த வைத்திய சிகிச்சை பிரிவுக்கு 60 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனால் 360 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மூச்சு திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரம் அதிகளவில் தயார் நிலையில் உள்ளன.

மேலும், கொரோனா நோயாளிகளின் மன அழுத்தங்களைப் போக்குவதற்கான கேரம், செஸ், பரமபதம் போன்ற விளையாட்டு சாதனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் மன அழுத்ததை போக்கும் வகையில் செய்திதாள்கள், சிறு கதை புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுவற்றில் ஆங்காங்கே நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக காலை, மாலை மற்றும் இரவு என மூன்று நேரங்களில் சுழற்சி முறையில் மருத்துவர்களும், செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK