திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் - ஆக்சிஜன் படுக்கைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் - ஆக்சிஜன் படுக்கைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

கொரோனா தடுப்பு நடவடிக்கை, கள ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி வருகை புரிந்தார். திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 300 ஆக்சிசன் படுக்கைகள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தார்.

Advertisement

இந்த நிலையில் திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் போர்கால அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்று பரிசோதனையை உயர்த்துவது, ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிப்பது, அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கோவிட் கேர் மையங்களை அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளும் தீவிரமாக செய்ய வேண்டும் என அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்கனவே முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் ஆக்சிசன் படுக்கைகளை அதிகரிக்கும் பொருட்டு பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 5 மாவட்டங்களில் 2000 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு‌.க ஸ்டாலின் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வில் நேரடியாக களம் இறங்கியுள்ளார். குறிப்பாக சேலம், மதுரை ஆய்வினை முடித்துவிட்டு தற்போது திருச்சியில் ஆய்வினை மேற்கொண்டார்.

திருச்சி பொறுத்தவரை தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக ஏற்படுத்தப்படுள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள் உட்பட 200 படுக்கைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவ செயலர், மாவட்ட ஆட்சியர், ஆணையர், மருத்துவத்துறையினர், மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் 

52 ஆக்சிஜன் இணைப்பு கூடிய படுக்கை மற்றும் 42சாதாரண சிகிச்சை படுக்கை உள்ளடக்கிய சிகிச்சை மையத்தை துவக்கி வைத்தார். 

Advertisement

அடுத்ததாக திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 300 ஆக்சிஜன் படுக்கைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து ஆய்வு நடத்தவுள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

இந்த ஆய்வில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK