திருச்சி திரையரங்கில் முதன் முறையாக கோவிட் தடுப்பூசி 

திருச்சி திரையரங்கில் முதன் முறையாக கோவிட் தடுப்பூசி 

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சியில் தினமும் மாநகர் மற்றும் புறநகர்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் விபரத்தை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. இதன் ஒருபகுதியாக இன்று திருச்சி கோட்டை ரயில் நிலையம் எதிரே உள்ள எல். ஏ. சினிமாஸ் திரையரங்கில் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஹக்கீம் தலைமையில் இரண்டு மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கோவிட் தடுப்பூசி திரைப்படத்தை காண வந்தவர்களுக்கு  போடப்பட்டது. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் வைத்திருக்கக்கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இன்று மட்டும் 150க்கும் மேற்பட்ட பார்வையாளகள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதேபோன்று மாநகரில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் பூங்கா, கோவில்,சர்ச் பகுதிகளில் இதுபோன்ற தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn