மலேசியா-திருச்சி இடையே மீண்டும் தொடங்கும்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை

மலேசியா-திருச்சி இடையே மீண்டும் தொடங்கும்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை


 வந்தே பாரதம் திட்டத்தின் கீழ் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு மீண்டும்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை தொடங்கப்பட உள்ளது.
 ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்கப்படும்  இந்த விமான சேவையால்  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

 குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு  இது மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். 
இந்தியாவில் கொரோனா தொற்றின்  இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள்,  இந்தியாவிற்கு இடையேயான விமான சேவையை ரத்து செய்தன. 

மலேசியா மற்றும் சிங்கப்பூர் தவிர மத்திய கிழக்கு  நாடுகளான அரபு நாடுகள் மற்றும் குவைத் ஓமன் போன்ற நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எட்டு விமான சேவைகள்  ஒரு மாதத்திற்கு முன் திருச்சியிலிருந்து  இயக்கப்பட்டது நிறுத்தபட்டது.

  தற்போது மலேசியா கோலாலம்பூருக்கு   விமான சேவைகள் வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளது.
திருச்சி விமான நிலையத்தின் இயக்குனர் எஸ் தர்மராஜ்
 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமான சேவைகள் திங்கள் கிழமைகளில் இருந்து தினமும் திருச்சியிலிருந்து   கோலாலம்பூருக்கு இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


 
வந்தே பாரத் திட்டத்தின் கீழ்  இயக்கப்படும் விமானங்களுக்கு சில விதிமுறைகளை மலேசிய அரசு அறிவித்துள்ளது. 
விமான சேவைகளில் இந்திய  பயணிகள் கோலாலம்பூருக்கு வருவதற்கு அனுமதி கிடையாது.  மலேசியர்கள் மட்டுமே விமான சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.அவர்களும்  மலேசியாவில்  14 நாட்கள்  தனிமைப்படுத்தப்படுவர்.    அரபு நாடுகள் ஓமன் நாடுகள் இந்தியாவில் இருந்து விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்தனர்.குவைத்தில் வந்தே பாரத்  திட்டத்தின் விமானங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.மலேசிய அரசும்  இந்திய விமானங்களை தடை செய்தனர்.தற்போது இந்தியா மலேசியா இடையே தொடங்கப்பட்டுள்ள இந்த விமான சேவைகள் அங்குள்ள இந்திய பயணிகள் வீடு திரும்புவதற்கு மிகவும் வசதியாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK