மாநகராட்சி அதிகாரி எஸ்ஆர்எப்ஐடி வேறு வேறு பெயர் ஒன்று கோவிட் பாசிட்டிவா நெகடிவ்ஆ உண்மையான ரிசல்ட் எது பரபரப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இன்று கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கலையரங்கம், துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கோவிட் சிகிச்சை மையங்களை திறந்து வைத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். முதல்வரின் வருகையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் உதவியாளர்கள் என அனைவருடைய மாதிரிகள் எடுக்கப்பட்டு கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
இதில் 3 செய்தியாளர்கள் உட்பட 5 பேருக்கு கோவிட் தோற்று உறுதியானது. இதையடுத்து ஒரு மாநகராட்சி அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியான அவர் கொடுத்த தொலைபேசி எண் அடிப்படையில் வந்தது. தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதும் உடனடியாக தன்னுடைய கோவிட் தொற்று பரிசோதனை சான்றிதழை பத்திரிக்கை ஊடகங்களுக்கு வெளியிட்டார் அவர் . அதிகாரி குறிப்பிடுவது போல ஏற்கனவே வெளிவந்த சான்றிதழில் அந்த அதிகாரியின் கைபேசி எண் உள்ளது எஸ்ஆர்எப் ஐடி எனப்படும் எண் வேறு ஒன்றாக உள்ளது .ஏன் இந்த குழப்பம் முதல்வர் வரும் 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த பரிசோதனை செய்து அனைவரையும் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்துகின்றனர்.
தற்போது அதிகாரி ஒருவருக்கு இணையதளத்தில் வெளியான ரிசல்ட் மூலம் அவருக்கு கோவிட் பாசிடிவ் என வந்துள்ளது என ஆதாரம் வெளியாகியது. ஆனால் தனக்கு நெகட்டிவ் என அவர் ஒரு சான்றிதழை சமர்ப்பிக்கிறார்.இந்த ரிசல்ட்டுகள் மூலம் பெயர் ஒன்றாக உள்ளது எஸ்ஆர்எப் ஐடி வேறு வேறாக உள்ளது. கைபேசி எண் ஒன்றாக உள்ளது.நடந்தது என்ன ரிசல்ட் எது உண்மை என கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK