மரண பயத்தை காட்டிய வங்கி - அரண்டு போன திருச்சி வாடிக்கையாளர்!!
திருச்சியை சேர்ந்தவர் வேணுகோபால். இவர் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள வங்கியில் தன்னுடைய லாக்கரை ஆப்ரேட் செய்வதற்காக சென்றுள்ளார். வங்கிக்கு சென்றவுடன் கேஷியரிடம் உள்ள ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
Advertisement
பின்பு, தன்னுடைய லாக்கரை பார்த்துவிட்டு திரும்பிய போது லாக்கர் அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கதவை தட்டி பார்த்தபோது அது கடினமாக இருந்ததால் வெளியில் சத்தம் எதுவும் கேட்கவில்லை. பின் பதற்றத்தில் தன்னுடைய செல்போனை எடுத்து சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு சென்று வங்கியின் லேண்ட்லைன் எண்ணிற்கு அழைத்து உள்ளார். நான் லாக்கர் அறையில் மாட்டிக்கொண்டு உள்ளேன் என கூறியவுடன் பதட்டத்தில் வங்கி ஊழியர்கள் அவரை வெளியேற்றி ஆசுவாசப்படுத்தினர்.
Advertisement
நேற்று அவர் மாட்டிக்கொண்டு ஒருவேளை வங்கி ஊழியர்கள் யாரும் கதவைத் திறந்துவிடவில்லை என்றால், காற்று கூட புக முடியாத அந்த லாக்கர் அறையிலும், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திங்கள் கிழமை அவருடைய உடல் மட்டுமே அங்கு கிடைத்திருக்கும்.
Advertisement
மேலும் இது குறித்து வேணுகோபால் இதுபோல் யாருக்கும் இனி நடக்கக் கூடாது என்றும், வங்கிகளும், ரிசர்வ் வங்கிகளும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.