100% மானியத்தில் பனை மரக்கன்றுகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.

100% மானியத்தில் பனை மரக்கன்றுகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.

தமிழ்நாட்டின் மாநில மரமும் தமிழர்களின் வாழ்வோடு மொழியோடும் இணைந்துள்ளதுமான பனை மரம், நிலத்தடி நீரை அதிகரித்தும் மண் அரிப்பினை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தியும் மண்ணிற்கு உகந்த மரமாக விளங்குவதோடு, அடிமுதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

எனவே பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்க ரூ.1.18 இலட்சம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் அதிகபட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் / ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு 100 விதைகளும் மற்றும் பனங்கன்றுகள் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 15 பனங்கன்றுகளும் பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் / ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 30 பனங்கன்றுகளும் 100% மானியத்தில் வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision