திருச்சி பாலக்கரையில் கடை அடைப்பு போராட்டம்:

திருச்சி பாலக்கரையில் கடை அடைப்பு போராட்டம்:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனையாளர் சங்கம் சார்பில்
திருச்சி பாலக்கரை, ஜெயில் பேட்டை, சப் ஜெயில் ரோடு,  ஆழ்வார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் டீக்கடைகள், காலணி விற்பனை நிலையங்கள் என 420 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் திருச்சி பாலக்கரை இப்போது வெறிச்சோடி கிடக்கிறது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த  மதரீதியான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.