திருச்சியில் ஆவின் பால் 10 ரூபாய்க்கு அறிமுகம்:
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.இது ஆவின் எனும் வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
திருச்சி ஆவினில் சமன்படுத்திய பால் மற்றும் நிறை கொழுப்பு பால் 180 மில்லி லிட்டர் 10 ரூபாய் விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆவின் தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.மேலும் அவர் கூறியதாவது… “குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சமன்படுத்திய பால் லிட்டருக்கு 40 ரூபாய் ரொக்க விற்பனைக்கு பால் லிட்டருக்கு 43 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.எனவே ஆவின் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்குமாறு” அவர் செய்திக்குறிப்பில் கூறினார்.