குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வராத்தை கண்டித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன், பொதுக்குழாய் முன்பு ஆர்ப்பாட்டம்.
பெண்கள், காலிக் குடங்களுடன் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்து விரைந்து வந்த கே.கே. நகர் காவல் சரக உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும், அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்துத் தரப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்ததன் பேரில், அப்பெண்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO