" மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ரத்து செய்து வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்" - தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு

" மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ரத்து செய்து வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்" - தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பது உறுதிசெய்யப்பட்டநிலையில் இதனை ரத்துசெய்து வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தவேண்டும், அதுவரை அரசியல்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் - தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் ஜெய்னுலாப்தீன் வேண்டுகோள்.

Advertisement

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று அதன் நிறுவனத் தலைவர் ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை ரத்துசெய்ய வேண்டும், கொரேனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுலாப்தீன்... மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடிகள் நடைபெறுவது குறித்து பலஇடங்களில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு முறையை ரத்துசெய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தவேண்டும். அரசியல் கட்சிகள் வாக்குச்ச்சீட்டு முறையை கொண்டுவர வலியுறுத்த வேண்டும். அதுவரை அரசியல் கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

Advertisement

வேளாண்மையையும், விவசாயத்தை பாதிக்கும் என்று அனைவரது கருத்தை ஏற்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். டெல்லியில் ஏற்பட்ட கிளர்ச்சி நாடுமுழுவதும் நடைபெறவேண்டும். மூட நம்பிக்கைகள் ஒழிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த உள்ளோம். எங்கள் அமைப்பு தேர்தல் அரசியலில் நேரடி பங்களிப்பு கிடையாது. மஸ்ஜிதுல் கட்சி ஓவைஸி நல்ல பேச்சாளர். ஹைதராபாத்தில் நல்ல செல்வாக்கு கொண்டவர். அவர் உருது பேச கூடியவர், தமிழ்நாட்டில் அதிக அளவிலான மக்கள் தமிழ் முஸ்லீம்கள் எனவே பெரும்பாலான மக்களிடம் உவைஸி அரசியல் எடுபடாது.

வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் இருக்காது. அதற்கு காரணம் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கவே வாய்ப்பு உள்ளது. எனவே அ.தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். வாக்குச்சீட்டு முறையிலோ அல்லது நேர்மையாகவோ தேர்தல் நடந்தாலோ தி.மு.க கூட்டணி தான் வெற்றிபெறும். திமுகமீது மக்களுக்கு பெரிய ஆதரவு இல்லை, ஆனால் அதிமுகமீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a