ஸ்ரீரங்கம் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை!!

ஸ்ரீரங்கம் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை!!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளித்திருமுத்தம் கிராமம், வார்டு- B, பிளாக் -22 ல் திருக்கோயிலுக்கு சொந்தமான மனை இடத்தினை திருக்கோயில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இடத்தினை இவ்வறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தினை காலிசெய்து திருக்கோயில் வசம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறின் இந்துசமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு விதிகளின்படி திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவில் ஜேசியின் நோட்டீஸை தொடர்ந்து அவர்களது சிஷ்யர்கள்,உள்ளூர்வாசிகள் கோவில் இணை ஆணையரை விளக்கம் கேட்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement