வேகமா போடுங்க வேகதடையை... அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!!

வேகமா போடுங்க வேகதடையை... அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த டிசம்பர் மாதம் 30, 31ம் தேதிகளில் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக தமிழக முதலவர் வருகையொட்டி திருச்சி மாநகரில் உள்ள பிரதான சாலையில் இருந்த வேகதடைகள் அகற்றம், சாலை தூய்மை, மின் விளக்கு பராமரிப்பு பணிகள் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டன. 

Advertisement

குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர், கோர்ட், ஒத்தக்கடை, மத்திய பேருந்து நிலையம், சோமரசம்பேட்டை, உய்யக்கொண்டான் சாலை, அரசு மருத்துவமனை சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் இருந்த வேகதடைகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து இரண்டு நாட்கள் முதல்வர் பிரச்சாரம் முடித்து விட்டு சென்ற நிலையில், சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகள் அகற்றப்பட்டு விட்டன. 

ஆனால் வாகனங்களில் வேகத்தை குறைப்பதற்க்கவும், விபத்தை தடுப்பதற்காகவும் போடப்பட்டிருந்த வேகதடை மீண்டும் புதிய அமைக்கவில்லை. முதலமைச்சர் திருச்சிக்கு வந்து சென்று 7 நாட்கள் ஆகியும் இதுவரை வேகதடை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேருந்துங்கள், இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பிரதான சாலையில் அசுர வேகத்தில் செல்வதால் சாலையில் நடந்து செல்பவர்களும், பிற வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். மேலும் நாள்தோறும் இந்த சாலைகளில் தற்பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. 

https://play.google.com/store/apps/details?id=com.india.thefoodiee

Advertisement

இதுமட்டுமின்றி சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் வசதிக்காக போர்கால அடிப்படையில் சில கட்டுப்பாடுகளை தளர்க்கும் அதிகாரிகள் மீண்டும் அந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதில் காலம் தாழ்த்துவது ஏன் என்று கேள்வி பொதுமக்கள் எழுப்புகின்றனர்.