கன்னியாகுமரி டூ சென்னை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் - சிறுவனுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு
மாஸ்டர் சர்வேஷ் ஒன்பது வயது நிரம்பிய ஒரு தடகள வீரர். இவர் சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்து கொணடு பல்வேறு தடகள போட்டிகளில் கலந்து கொணடு 146 பதக்கங்கள், 62 வெற்றி பரிசுகள், 256 சான்றிதழ்கள், 16 ரொகக் பரிசுகளை பெற்று சாதனைகளை படைத்துள்ளார்.
ஒரு கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓட்டத்தில் 2017 ஆம் ஆண்டு 5 வயதில் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். 6 வயதில் 486 கி.மீ. தூரத்தை கடந்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 56 மாரத்தான் ஓட்டங்களில் பங்கு பெறற் ஒரே இளம்
பங்கேற்பாளர். அக்டோபர் 2, 2021 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நிலையான வளாச்சி இலக்குகள் (SDG Awareness Run 2021) விழிப்புணாவு தொடர் ஓட்டத்தை மாஸ்டர் சர்வேஷ் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலையில் இருந்து தொடங்கி சென்னை நோக்கி புறப்படுகிறார்.
இவர் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, தென் இந்தியாவின் முக்கிய பகுதிகளின் வழியாக 10 நாட்களில் 750 கிமீ தனது தொடர் ஓட்டத்தின் முடிவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை அடைகிறார். நிலையான வளர்ச்சி இலக்குகள் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் T. மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மொத்த பயணத்திலும் சாவேஷ் ஐக்கிய நாடுகளின் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில்
ஏற்படுத்தவிருக்கிறார். இதை தவிர, தமிழகத்தில் அவரது பயண தடத்தில்,
அவர் இரண்டு லட்சம் விதை உருண்டைகளை வழி நெடுகிலும்
விதைக்கவிருக்கிறார். அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்த செயல், இதுவரை யாரும் செய்ய துணியாத ஒரு செயலாக, எந்த சாதனைபட்டியலிலும் இடம் பெறாத ஒரு செயலாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தொடர் ஓட்டமாக நிலையான வளர்ச்சி இலக்கு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மேற்கொண்டுள்ள மாஸ்டர் சர்வேஷ் இன்று திருச்சி வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாஸ்டர் சர்வேஷ்க்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது அவரது பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn