அம்மனுக்கு விரதம் இருக்கும் திருச்சி போலீஸ்

அம்மனுக்கு விரதம் இருக்கும் திருச்சி போலீஸ்

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை வரை கோலாகலமாக நடைபெறும் இந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமம் கிராமமாக பக்தர்கள் சமயபுரத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். 

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்கள் மூலம் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனால் சமயபுரம் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோலம் பூண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

விழாவினை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி, பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களது பல்வேறு குடும்ப சூழ்நிலைகளை கடந்து கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். அவ்வாறு மகிழ்ச்சியோடு அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமலும், பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சித்திரை தேரோட்ட திருவிழாவும், எவ்வித சட்ட ஒழுங்கு

சீர்கேடு இல்லாமல் சீரும் சிறப்புடன் திருவிழா நடந்து முடிய வேண்டும் என சமயபுரம் போலீசார் பக்தியுடன் மாலை அணிந்து விரதம் இருந்து தினமும் அம்மனை தரிசனம் செய்து வேண்டி வருகின்றனர். போலீசாரின் இத்தகைய வேண்டுதலானது போலீஸ் வட்டாரத்தை மட்டுமின்றி பக்தர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn