திருச்சியில் குளத்தில் அமைச்சர் திறந்துவிட்ட தண்ணீரை நிறுத்தியது யார் என பொதுமக்கள் கேள்வி

திருச்சியில் குளத்தில் அமைச்சர் திறந்துவிட்ட தண்ணீரை நிறுத்தியது யார் என பொதுமக்கள் கேள்வி

நீர் ஸ்தலமாக விளங்க கூடியது திருச்சி திருவானைக்கோவில். இங்குள்ள தெப்பக்குளம் ராம தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் போது இந்த குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது. 42,350 கன மீட்டர் கொள்ளளவுள்ள இந்த குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து மலட்டாறு வழியாக தண்ணீர் நிரப்பபட்டது.

ஆனால் தற்போது அதன் வழிதடங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் நிரப்புவதற்காக பழுதடைந்த குழாய்கள் சீரமைக்கபட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று குளத்தை பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

அமைச்சர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஏராளமான அரசியல் கட்சியினர் அதிகளவில் கூடியிருந்தனர். இதில் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர். அப்போது தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அதிக அளவு கூட்டம் ஏற்பட்டது. திருச்சியில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்று எளிதில் பரவும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அமைச்சர் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு சில மணி நேரங்களிலேயே குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. அப்பகுதி மக்கள் வெறும் அரசு நிகழ்ச்சிக்காக மட்டுமே தண்ணீர் சிறிது நேரம் திறந்து விடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநகராட்சி மூலமாக தான் குளத்திற்கு தண்ணீர் நீரேற்று நிலையம் மூலமாக கொடுக்கப்படும் நிலையில் தண்ணீரை யார் நிறுத்தியது என்று திருவானைக்காவல் மக்கள்   கேட்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve