மூச்சு திணறல் ஏற்பட்ட சிறுமியை 30 நிமிடத்தில் காப்பற்றிய மருத்துவர்கள்
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா மணமேடு கிராமத்தை "சேர்ந்தவர் திருநாவுக்கரசு. கூலித்தொழிலாளி. இவர் மகள் கிருத்திகா (7). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திண்பன்டம் வாங்க தந்தை திருநாவுக்கரசிடம் ரூ.5 வாங்கியுள்ளார். பின்னர் நாணயத்தை வாயில் வைத்து விளைாயாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாரத விதமாக நாணயத்தை விழுங்கி விட்டார்.
பயந்துபோன சிறுமி பெற்றோரிடம் சென்று அழுதுகொண்டே நாணயத்தை விழுங்கியதை கூறினார். இதில் அதிர்ச்சிடைந்த பெற்றோர் மகளை முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், உடனே திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதில் பதற்றம் அடைந்த பெற்றோர் நாணயத்தை விழுங்கி மூன்று மணி நேரம் கடந்த சூழ்நிலையில் மகளை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு முதல்கட்டமாக எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அதில் உணவுக்குழாயின் கீழ் பகுதி வரை நாணயம் சென்று நிற்பது தெரிய வந்தது. தானாகவே நாணயம் கீழிறங்கி வருவதற்கான வாய்ப்பு இருந்ததால், முதலுதவிகள் செய்து நாணயம் கீழிறங்குவற்காக காத்திருந்தனர்.
சில மணி நேரங்கள் கடந்த நிலையில் மீண்டும் சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். ஆனால் நாணயம் இருந்து இடத்தைவிட்டு நகராமல் இருந்துள்ளது. இதற்குள் சிறுமிக்கு நெஞ்சுவலியும் ஏற்பட, இனிதாமதித்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக்கருதிய மருத்துவர்கள் குழு எண்டோஸ்கோபி மூலம் நாணயத்தை வெளியில் எடுக்க முடிவு செய்தனர்.
அதற்கான ஏற்பாடுகள் உடன் செய்யப்பட்டு மருத்துவர் கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜசேகர் மற்றும் சங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் எண்டோஸ்கோபி சிகிச்சை முறையின் மூலம் சிறுமியின் உணவுக்குழாயின் கீழ் பகுதியில் சிக்கியிருந்த நாணயத்தை வெளியில் எடுத்தனர்.
சிறுமி நெஞ்சு வலி உள்ளிட்ட எந்த பிரச்னையும் இன்றி தற்போது நலமுடன் இருக்கிறார். திறமையாக செயல்பட்டு சிறுமைனியை காப்பாற்றிய அரசு மருத்துவர்களை மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சக மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision